மன்னாரன் கம்பெனி மாதிரில இருக்கு!!!!!
ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ!!!

Ø உலகின் முதல் பெண் - பிரதமராய் பதவி வகித்தவர்- சரிமாவோ பண்டார நாயகே
Ø உலகின் முதல் பெண் - ஜனாதிபதியாய் பதவி வகித்தவர்- மரியா எஸ்டெலா பெரோன்
Ø உலகின் முதல் பெண் - போலஸ் - அமெரிக்காவைச் சேர்ந்த ஆலஸ்டெஃபங்ஸ் வெலஸ் - ஆண்டு 1910
Ø உலகின் முதல் பெண் - விண்வெளிப் பயணம் செய்தவர் - வாலென்டினா டெரஸ் கோவா ரஷ்யா நாள் 16.6.1963.
Ø உலகின் முதல் பெண் - விண்வெளியில் நடந்தவர் ஸ்வெட்லானா சவட்ஸ்கயா
Ø உலகின் முதல் பெண் - விமானி மிஸ்யேல் பங்கன்ஸ்பல் - இஸ்ரேல்
Ø உலகின் முதல் பெண் - பாதரியார் - பெனிலோம் ஜாமிசன் - நியுசலாந்து
Ø உலகின் முதல் பெண் - மருத்துவர் - காரட் ஆண்டர்சன்
Ø உலகின் முதல் பெண் - அறுவை மருத்துவர் - எலிசபத் பளக்வெல் - இலண்டன்
Ø உலகின் முதல் ஜ.நா. சுபையல் அங்கம் வகித்தவர்- விஜயலட்சுமி பண்டிட்
Ø உலகின் முதல் சட்டமன்றத் துணைத்தலைவர் - டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி
Ø உலகின் முதல் விமான்ப் பணிப்பெண் - எலன்சர்ச்
Ø விண்ணில் உயிர் நீத்தவர் - மேரி கனீவ்
Ø சுயசரிதை எழுதியவர்- பயர்ஸ் ஒயட்
Ø ஒலிம்பிக் தீபம் ஏற்றியவர் - என்ரி குயேட்டா பாசலயோ
Ø தூதர் - ஔவையார்
Ø கிரிக்கெட்டில் அதிக ஓட்டம் எடுத்தவர் -சந்தியா அகர்வால்
Ø நாணயத்தில் இடம் பெற்றவர் - மர்தா வாஷிங்டன்
Ø நாட்டை ஆண்டவர் - ஹாஷெப்ஸ்ட் - எகிப்து
Ø அதிக நகை அணிந்தவர் - எலிசபெத் ஹோம்ஸ்
Ø நோபல் பரிசு பெற்றவர் - டாயல்மக் என்னும் நாவலாசரியை
Ø அதிகப் பாடல் பாடி கின்னஸில் இடம் பிடித்த்வர்-லதாமங்கேஷ்கர் (2000 க்கு மேற்பட்ட பாடல்)
Ø நீண்ட காலம் ஆட்சி புரிந்தவர் விக்டோரியா மகராணி 63 ஆண்டுகள்.
Ø 20 ஆம் றுற்றாண்டில் நீண்ட காலம் ஆட்சி புரிந்தவர் திருமதி. இந்திரா காந்தி.
Ø அதிக விருதுகளை பெற்ற பெண் - அன்னை தெரஸா
Ø உலக அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற முதல் பெண் பெர்தா கன்ஸ்க வான்ஸட்னர்.(ஆஸ்திரேலியா)
Ø முதல் வெளி நாட்டுத்தூதர் அலெக்சாண்டர் குலண்டாய் என்னும் இரஷ்யப் பெண்மணி (நார்வே தூதர்)
Ø உலகை நடந்தே வலம் வந்தவர் பயானோ காம்பெல்
Ø உலகின் முதல் தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஜெர்மனி 1934 உர்சலா பேட்ஸ்க
Ø நடிப்புக்காக நான்கு முறை ஆஸ்கார் விருது பெற்ற நடிகை ஹேதரின் ஹெப்பர்ன்.
Ø நீண்ட கூந்தலுக்காக கின்னஸில் இடம் பெற்றவர் டயானிவட் கூந்தலன் நீளம் 12 அடி 8 அங்குலம்
Ø அதிக வயதில் பிள்ளை பெற்றவர் அமெரிக்கா கலபோர்னியாவைச் சேர்ந்த அரகல்- வயது 65
Ø தனியே வடதுருவம் அடைந்தவர் முதல் பெண் லப் ஆர்னிசன் (மோரிஸ்)
Ø நீண்ட தாடியுடைய முதல் பெண் ஜெனிபர் தாடியின் நீளம் 1 அடி 2 அங்குலம்.
Ø சிறு வயதில் (4 வயது) புத்தகம் எழுத வெளியட்டவர் டூரோத்த 1962
Ø நீர் மூழ்கக் கப்பலின் தலைமை பொறுப்பு ஏற்ற முதல்பெண் சோல்வக்கரே நார்வே நாடு
Ø அதிக வயது வரை (116) வாழ்ந்து வந்த பெண் பெலாகெயா ஜகூர்தயேவா ரஷ்யா
பழந் தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. ஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4) கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை.
திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள் ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர். திங்கள் ஞாயிற்றைச் சுற்றிவர எடுக்கும் நேரம் 27 நாட்கள், 7 மணி, 43 மணித்துளிகள்.
பண்டைய நாட்களில் காலத்தைப் பெரும்பொழுது சிறுபொழுது என வகுத்தனர். இளவேனில் (சித்திரை, வைகாசி ) முதுவேனில் (ஆனி, ஆடி), கார் (ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, ) பின்பனி ( மாசி, பங்குனி) ஆறு பெரும் பொழுதாகும். வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும்.
மேலும் ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 நிமிடங்களாகும். சங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன. முழுமதி நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது. சங்க இலக்கியங்களில் தமிழ் மாதப்பெயர்கள் காணக்கிடைக்கின்றன. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சியை விளக்கும்போது 'திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன' எனக் கூறுவதைக் காணலாம். எல்லாத் திங்கள்களின் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். "நாள்முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவி" எனும் பாடல் நாள்மீன்(நட்சத்திரம்) பற்றி பேசுகிறது. "திங்கள் முன்வரின் இக்கே சாரியை" என்ற பாடல்வரி மாதத்தைப் பற்றியது. எனவே இன்றுள்ள 12 மாதங்களும் அவர் காலத்தில் இருந்து வருகின்றன எனத் துணியலாம்.