Wednesday, October 8, 2008

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாய் இருக்கும் வில்லன்கள் யார்

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாய் இருக்கும் வில்லன்கள் யார்? அழிக்க வேண்டிய நரகாசுரர்கள் யார் என்று சமூக சிந்தனையுள்ள சில பிரபலங்களைக் கேட்டோம். அவர்கள் தந்த லிஸ்ட் இது:
சத்யராஜ்
1.கடவுள்
2.மதம்
3.ஜாதி
4.சாமியார்
5.நம்ம ஊர் அரசியல்
6.ஏமாற்றுபவர்கள்
7.ஏமாறுபவர்கள்
8.பயிலாமை
9.முயலாமை
10.இயலாமை
தமிழச்சி
1.உலகத்திலேயே இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினாவை பாழ்படுத்தும் பீச் குப்பை.
2.சிக்கன், மட்டன் வகைகளைப் பொரித்து பாக்கெட்டில் விற்கும் கம்பெனிகள்.
3.சிக்னலில் காத்திருக் கும் டூ வீலரைக்கூட இடித்துக்கொண்டு நிற்கும் தண்ணீர் லாரிகள்.
4.சாலையைக் கடக்கும் போதுகூட இடை விடாமல் பேச வைக்கும் செல்போன்கள்.
5.உலகம் வெப்பமயம் ஆவது பற்றி கவலைப்படாமல் புகையைக் கக்கும் பேருந்துகள்.
6.அமெரிக்கத் தூதரகம் முன்பு கால் கடுக்க காத்துக்கிடக்கும் பெருங்கூட்டம்.
7.நடிகர்களின் கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்கள்.
8.பெண்களை அழ வைக்கும், வில்லியாகக் காட்டும் டி.வி. சீரியல்கள்.
9.முதியோர் இல்லங்களில் அதிகரித்து வரும் முதியோர்கள்.
10.கொஞ்சம்கூட குறையாத, பேருந்துகளில் தொங்கிச் செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை.
சுப.வீரபாண்டியன்
1.சாதீய அமைப்பும் அதில் மக்களுக்கு உள்ள பிடிப்பும்.
2.திரைப்படத்திலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் தொலையும் நேரம்.
3.சுற்றுச்சூழலில் அக்கறையில்லாமை.
4.இந்துத்துவ வன்முறை அரசியல்.
5.ஆற்றுநீர் உரிமை மறுக்கும் அண்டை மாநிலங்கள்.
6.முட்புதராய் மண்டிக்கிடக்கும் மூடநம்பிக்கைகள்.
7.கையூட்டு வாங்கியும், கொடுத்தும் பழகிப்போன சமூகம்.
8.பொதுவாழ்க்கைக்கு வரத் தயங்கும் நேர்மையாளர்கள்.
9.உலகமயமாதலில் நாம் இழந்துகொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கை.
10.இன்னும் அழுத்தமாய் மேலோங்கி நிற்கும் ஆணாதிக்கம்.
நல்லகண்ணு
1.காடுகள் அழிப்பு
2.குடிதண்ணீர் வியாபாரம்
3.மணல் கொள்ளை
4.மக்கள் நலத்திட்டங்களில் மக்களை ஈடுபடுத்தாமல் இடைத் தரகர்களிடம் ஒப்படைப்பது.
5.லஞ்ச ஊழல்.
6.சமூக விரோதிகள் - அரசு அதிகாரிகள் கூட்டாட்சி.
7.கல்வி, மருத்துவத் துறையில் தனியார்களின் அதிகரிப்பு.
8.ஜாதி மத அரசியல்
9.தாய்மொழி புறக்கணிப்பு
10.வாரத்தில் ஏழு நாட்களிலும் 24 மணி நேரமும் பார்க்கப்படும் தொலைக்காட்சி..

Tuesday, October 7, 2008

கொலு வைப்பதன் தத்துவம்!

கொலு வைப்பதன் தத்துவம்!
ஒன்பது படிகள் :நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆன்மரீதியாக மனிதன் தம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும்.
இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம். இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம்.
ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும்.
* முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஐந்தாவது படியில் ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.
* ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.
மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று கடைசியில் தெய்வம் ஆக வேண்டும் என்கிற தத்துவத்தை உணர்த்தவே இப்படி கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்க வேண்டும்.(மூலம் - வெப்துனியா)

தெரியுமா உங்களுக்கு? (நன்றி : அன்புக்குரிய எம்.கே.எஸ்.)

தெரியுமா உங்களுக்கு? (நன்றி : அன்புக்குரிய எம்.கே.எஸ்.)
இளநீரை இரத்த நீருக்குப் (Blood plasma) பதிலாக உபயோகப்படுத்த முடியும்.
எந்தக் காகிதத்தையும் பாதிப்பாதியாக ஏழுமுறைக்குமேல் மடிக்க முடியாது.
தொலைக்காட்சியைப் பார்க்கும்போது செலவழிக்கும் சக்தியைவிட நீங்கள் தூங்கும்போது அதிக சக்தியைச் செலவிடுகிறீர்கள்.
சீட்டுக்கட்டில் மீசையில்லாத ஒரே ராஜா 'ஆட்டின்' ராஜா தான்.
போயிங்757 விமானத்தின் இறக்கை ரைட் சகோதர்கள் கண்டுபிடித்த விமானத்தைவிடப் பெரியது.
கடிகாரத்தின் முட்கள் நகரும் (Clockwise) திசையில் சுழலும் ஒரே கிரகம் வீனஸ் தான்.
மார்ல்பரோ சிகரட் கம்பெனியின் முதல் உரிமையாளர் இறந்தது நுரையீரல் புற்றுநோயினால்.
இதுவரை பதவி வகித்த எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் மூக்குக் கண்ணாடி அணிபவர்களே - சிலர் கண்ணாடியை பொதுஇடங்களில் அணிவதில்லை.
வால்ட் டிஸ்னிக்கு எலிகள் என்றால் பயம்.Richard Millhouse Nixon - இந்த அமெரிக்க ஜனாதிபதியின் பெயரில் Criminal என்ற வார்த்தைக்கான எல்லா எழுத்துக்களும் உள்ளன.
இதே வார்த்தைகான எல்லா எழுத்துக்களும் உள்ள பெயர் கொண்ட மற்றொரு அமெரிக்க ஜனாதிபதி William Jefferson Clinton. வண்ணத்துப்பூச்சிகள் தங்கள் கால்களால் சுவையை உணர்கின்றன.
ஒரு சூறாவளிக்காற்று பத்து நிமிடங்களில் வெளியிடும் சக்தி உலகத்தில் உள்ள எல்லா அணுயுதங்களின் மொத்த சக்தியைவிட அதிகம்.
மிருகங்களில் குதிக்க முடியாத ஒரே மிருகம் யானைதான்.200 கோடி மக்களில் ஒருவர்தான் 116 வயதுக்கு மேல் வாழ்கிறார்.
பெண்கள் ஆண்களை விட இரண்டுமடங்கு அதிகமாக கண் சிமிட்டுகிறார்கள்.
இந்தியானாவிலுள்ள தலைமை நூலகம் ஒவ்வொரு வருடமும் ஒரு அங்குலம் கீழே இறங்குகிறது.
காரணம் அந்த நூலகத்தைக் கட்டிய பொறியாளர்கள் நூலகம் எத்தனை எடை புத்தகங்களைத் தாங்கும் என்று சரியாக கணிக்கத் தவறியதுதான்.
நத்தை சாதாரணமாக மூன்று வருடங்கள் தூங்கக்கூடும்ஆங்கிலத்தில் Month என்ற வார்த்தைக்கு எதுகையாக எந்த வார்த்தையும் கிடையாது.
நமது கண்கள் பிறந்ததிலிருந்து அதே அளவுதான் இருக்கிறது - வளர்வதில்லை. ஆனால், நமது காதுகளும் மூக்கும் வளர்வது நிற்பதே இல்லை.
எல்லாப் பனிக்கரடிகளும் இடதுகைப் பழக்கம் கொண்டவை.
TYPEWRITER என்ற வார்த்தைதான் டைப்ரைட்டரின் விசைப் பலகையின் ஒரு வரிசையில் (one row) உள்ள எழுத்துக்களிலிருந்து அமைக்கக்கூடிய நீளமான வார்த்தை.