Friday, June 15, 2007

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான மதுரை தென்னக ரயில்வேயின் சென்னை-கன்னியாகுமரி தடத்தில் சென்னையிலிருந்து 496 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. தொழில், சுற்றுலா, கல்வி, கலாச்சாரம் என்று தமிழின் அனைத்துத் துறைகளிலும் கால்பதித்து வெற்றி கண்டிருக்கும் இந்த மதுரை, சுற்றுலா செல்வோருக்கு மிகவும் உகந்ததாக இருக்கும். மதுரை மண்ணை மணக்கச் செய்யும் மீனாட்சி அம்மன் கோவிலில் ஆரம்பித்து, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, அழகர்கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, வைகை அணை என்று நகரைச் சுற்றிலும் இயற்கை வளம், ஆன்மீகம் கொழிக்கும். அதனை விடுத்து மதுரையிலிருந்து கொடைக்கானல், பழநி, இராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற மற்ற சிறப்புகள் வாய்ந்த இடங்களுக்கும் போக்குவரத்து வசதிகள் மிகுந்துள்ளது. 24 மணிநேர போக்குவரத்து வசதிகள் இங்கு உண்டு. தென்னக ரயில்வேயில் மதுரை ஒரு மிகமுக்கிய சந்திப்பாகும். ரயில்வே பயண நேரத்திற்கு http://www.southernrailway.org/ என்ற தளத்தை நாடவும்.இந்தியர்கள் அனைவருமே மதுரையை மீனாட்சியுடன் இணைத்தே பார்த்து வருகின்றனர். வெளிநாட்டவரும் இதற்கு விதிவிலக்கல்ல. மதுரைக்கு வருவோரது பயணம் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போகாமல் நிறைவு பெறுவதில்லை என்பது எனது எண்ணம். அன்னை மீனாட்சியின் புகழ் எங்கெங்கும் பரவிக்கிடப்பதை இதனால் புரிந்து கொள்ளலாம். இதனை அறியாதவர் யாவரும் உண்டோ ? சாதாரண கிராமத்து பெண்மணி கூட, மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி என்று அவளை அறியாமல் கூறினாலும், அவளது மனதில் எவ்வளவு ஆழத்தில் அன்னை மீனாட்சி பதிந்து இருக்கிறாள் என்று அறிவது சிறப்பு.

மதுரை கோயிலின் தோற்றம் சம்பந்தப்பட்ட செய்திகள்

இந்திரன் ஒருமுறை ஒரு துர்தேவதையைக் கொன்றதற்கு பிராயச்சித்தம் செய்யும் பொருட்டு பூலோகத்திற்கு வந்தான். அப்போதைய பாண்டிய நாட்டின் கடம்ப வனத்திற்கு வந்தபோது தன் துன்பங்கள் நீங்கியதை உணர்ந்தான். உண்மையை அறியமுற்பட்ட போது, அங்குள்ள ஒரு கடம்ப மரத்தின் அடியில் உள்ள சிவலிங்கம்தான் தன் துன்பம் நீங்கியதற்குக் காரணம் என்பதை அறிந்தான். அதன் பக்கத்தில் ஒரு சிறு குளமும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவன் சிவலிங்கத்தை வணங்கி அதற்கென ஒரு சிறிய கோவிலைக் கட்டினான். அந்த சிவலிங்கம் இன்னும் வழிபாட்டில் இருந்து வருகிறது. அதற்கு இந்திர விமானம் என்ற பெயர் கொண்டு மதுரை கோயிலில் இருந்துவருகிறது.ஒருமுறை மானவூரைச் சேர்ந்த தனஞ்செயன் என்ற வியாபாரி கடம்ப வனத்தின் வழியாகச் சென்ற போது, இரவு இந்திர விமானத்தில் தங்க நேர்ந்தது. காலையில் அவன் எழுந்து பார்த்தபோது சிவலிங்கத்தை வழிபட்டதற்குரிய அடையாளங்கள் தெரிந்தது. அதனை தேவர்களின் வேலையென நினைத்த வியாபாரி மன்னன் குலசேகரபாண்டியனிடம் சென்று கூறினான். அதற்கு ஏற்றார்போல் முதல் நாள் இரவே, சிவபெருமான் பாண்டியனின் கனவில் தோன்றி குறிப்பிட்ட இடத்தில் ஒரு கோயிலும், அதனை மையமாகக் கொண்டு ஒரு நகரத்தையும் நிர்மாணிக்குமாறு பணித்தார். குலசேகரனும் கட்டி முடித்தான். முதன் முதலில் குலசேகர பாண்டியனால் இந்தக்கோயில் கட்டப்பட்டது என்றாலும், அந்தக்கோயிலை மிகச்சிறப்பாக மாற்றிய பெருமை நாயக்கர்களையே சாரும். நாயக்கர்கள் மதுரையை 16முதல் 18ஆம் நூற்றாண்டு வரை ஆண்டிருக்கிறார்கள். அதனால் தங்களது ராஜமுத்திரையின் பிரதிபளிப்பாக மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலை நிர்மாணித்திருக்கிறார்கள்.

கம்பீரமான மதுரை கோயில் கோபுரங்கள் - ஒரு பார்வை

750x830 அடி பரிமாணத்தில் 25ஏக்கர் அளவில் இந்தக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் பனிரெண்டு கோபுரங்களும் கடவுள் மற்றம் புனித தேவதைகளின் சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நான்கு பெரிய கோபுரங்களும் திசைக்கொன்றாக வெளிச் சுவரில் இருக்கின்றன. தெற்கு வாசலில் உள்ள இந்தக்கோபுரம்தான் மற்றவைகளைவிட பெரியது. கீழிருந்து கிட்டத்தட்ட 50 மீட்டர் (160 அடி) உயரத்தில் இருக்கறது. இந்தக்கோபுரத்தின் மீது மட்டுமே நம்மால் ஏறிப்பார்க்கமுடியும். இந்தக்கோபுரத்தின் மீதிருந்து பார்த்தால் மற்ற அனைத்து கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் (சுவாமி சன்னதிக்கு மேலிருக்கும் கோபுரம்) மிகத் தெளிவாகப் பார்க்கமுடியும்பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்தக் கோயிலில் சிவனுடன் ஒன்றிணைந்த அன்னை மீனாட்சி வீற்றுள்ளார். மீனாட்சிக்கு நான்கு, சொக்கநாதருக்கு நான்கு, சுற்றுச் சுவரில் நான்கு என இந்தக் கோயிலில் 12 கோபுரங்கள் இருக்கின்றன. வெளிச்சுற்றுச் சுவரில் இருக்கும் ஆச்சரியப்பட வைக்கும் கோபுரங்களே மதுரையின் சிறப்பு. வெளிச்சுவற்றில் உள்ள கோபுரங்களின் அமைப்பின் பரிமாணங்கள் கீழ் வருமாறு.கிழக்கு கோபுரம் (ஒன்பது தளங்கள்) 161'3". 1011 சிற்பங்கள்தெற்கு கோபுரம் (ஒன்பது தளங்கள்) 170'6". 1511 சிற்பங்கள்மேற்கு கோபுரம் (ஒன்பது தளங்கள்) 163'3". 1124 சிற்பங்கள்வடக்கு கோபுரம் (ஒன்பது தளங்கள்) 160'6". மற்ற கோபுரங்களை விட குறைவான சிற்பங்கள்இந்த நான்கு சுற்றுச்சுவர் கோபுரங்களை விடுத்து, மேலும் நான்கு சிறிய கோபுரங்கள் இந்த இரண்டு ஆலயங்களிலும் காணப்படுகின்றன. வேலைப்பாடுகள் முடிக்கப்படாமல் உள்ள கிழக்கு வாசல் ராஜகோபுரத்தின் அடிப்பகுதி கிட்டத்தட்ட 60 மீட்டர்கள் இருக்கிறது (174 சதுர அடி) இதன் வேலை முடிக்கப்பட்டால் இந்தக் கோயில் இந்தியாவின் மிகச்சிறந்த கோயில்களுள் ஒன்றாகிவிடும். வருத்தத்தைத் தரும் வகையில் இது முடிவு பெறாமல் இருக்கிறது.

நீங்கள் இந்த ஐந்து வழிகளில் ஏதேனும் ஒன்று வழியாக உள்ளே வரலாம். பெரும்பாலும் மீனாட்சி அம்மன் சன்னதிக்கு எதிரே இருக்கிற கிழக்கு வாசல்தான் உபயோகப்படுத்தப்படுகிறது. கோவிலின் மூலாதாரமான மீனாட்சி வீற்றிருக்கும் திசையை அதிகம் விரும்புவதில் ஏதும் வியப்பில்லையே. இந்த ஒரு வாயில் மட்டுமே கோபுரம் முடிவு பெறாமல் இருக்கிறது. இதன் பெரிய வடிவமும், பரிமாணங்களும் சிதம்பரம் கோயிலை ஒத்திருக்கிறது. இங்கு இன்னும் வெளியிடப்படாத சில கல்வெட்டுகள் இருக்கின்றன. இந்தக் கோபுரத்தின் கீழ் மதுரையின் காவல் தெய்வம் மதுரைவீரன் கம்பீரமாக வீற்றிருக்கிறார். இவருக்கு அருகில் பதினெட்டாம் படி இருக்கின்றது. இங்கு பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க சத்தியப் பிரமாணம் பெறப்படுவதாகவும், இங்கு பொய்சொன்னால், அவருக்கு உடனடி தண்டனையாக மரணம் ஏற்படுவதாக கிராமத்து பேச்சு வழக்குகள் தெரிவிக்கின்றன.

தமிழ் கலாச்சாரத்திற்கு கோயிலின் பங்களிப்பு

இறை வழிபாடு என்பதில் மட்டுமல்ல, மொழி வளர்ச்சிக்கும் மீனாட்சி அம்மன் கோயில் ஆற்றியுள்ள பங்கு அளவிட முடியாதது. தமிழின் கூடாரமாக மீனாட்சிஅம்மன் கோயில் இருந்திருக்கிறது. இந்தக்கோயிலின் திருவிழாக்கள் அருகாமையில் இருக்கின்ற கிராமத்து மக்கள் எல்லாம் ஒன்று கூடி கொண்டாடப்படுவதாக உள்ளது. இவ்வாறு மண்ணின் மணத்தை விட்டுவிடாமல் பாதுகாப்பதிலும் மீனாட்சி அம்மன் கோயிலின் பங்கு குறிப்பிடக்கூடியது. கலைஞர்கள், ஓவியர்கள், கட்டிட நிர்மாணிகள், இசைஞர்கள், பாகவதர்கள் ஆகியோருக்கு புகலிடமாகவும், அந்தக்காலத்தைப் போலவே, தற்காலத்திலும் அந்த நுண்கலைகளின் வளர்ச்சியில் இந்தக் கோயில் பெரும் பங்கு வகிக்கிறது.பழங்காலத்தில் இக்கோயிலின் கோபுரங்களை கணக்கில் கொண்டு 'நான்மாடக்கூடல்' (நான்கு கோபுரங்களின் ஒருங்கிணைப்பு) என்று அழைக்கப்பட்டது. சிவனே மதுரை என்ற பெயர் வைத்ததாகக் கூட மக்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்தக் கோயிலின் கட்டுமானம் பலகாலங்களில் பல பாணியில் முடிக்கப்பட்டிருக்கிறது. தற்போதுள்ள வனப்பு மிக்க கட்டிடக்கலை 16ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஏற்பட்டது. எனவே திராவிடக் கலைப்பாணிக்கு சக்தி மிகுந்த சாட்சியாக இந்தக் கோயில் திகழ்கிறது. திராவிடக் கலைப்பாணியின் அனைத்து அம்சங்களும் இந்தக் கோயிலில் இருக்கிறது. இந்தக் கோயிலை முதன் முதலில் பார்க்கும் போது சற்று குழப்பமும், சில சமயங்களில் தலை சுற்றலும் ஏற்படுவது இயற்கை. ஆனால் மிகச் சிறந்த கலைக்கூடமாக இந்தக் கோயில் இருப்பதை நீங்கள் புரிந்து கொள்ள உங்களது அடுத்தடுத்த பயணங்கள் கண்டிப்பாக உதவும். முதன் முறையே எல்லா படைப்புகளும் அங்கீகரிக்கப்படுவதில்லையே. பாரதியின் செந்தமிழ்நாடெனும் போதினிலே என்ற பாடலுக்கே அவரது காலத்தில் மூன்றாம் பரிசுதானே கிடைத்தது.அதே போல இக்கோயில் உட்பட்ட தென்னிந்தியக்கோயிலுக்கு இந்தியர்களால் தக்க மதிப்பு அளிக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை. கட்டிடக்கலை என்பதை மட்டுமே மனதில் கொண்டு விமர்சித்தால் அது நன்மை அளிக்கும். வடஇந்தியக் கட்டடக்கலை என்பதை ஒரு தராசாக வைத்து தென்னிந்தியக் கட்டடக்கலையை விமர்சித்தால் அது எப்படி ஒரு ஆரோக்கியமான கருத்தாக அமையும்? கோயிற்கட்டிடக்கலை பயில விரும்பி வரும் வெளிநாட்டவர்கள், தென்னிந்தியக் கோயிலின் எரியும் கற்பூரம், திருநீறு, கோவிலில் வீசும் மெல்லிய பூ மற்றும் சந்தனத்தின் மணம் சுற்றிலும் உயர்ந்திருக்கும் கோபுரங்கள் அவர்களது ஆர்வத்தை அதிகரிக்கும்.

பொற்றாமரைக்குளம்

அந்த மண்படத்தைக் கடந்து தற்போது புனித பொற்றாமரைக் குளத்தை அடைந்திருக்கிறோம். தெற்கு வாசல் பக்தர்களை நேரடியாக பொற்றாமரைக்குளத்திற்கு அழைத்து வருகிறது. அந்த நடைபாதையிலிருந்து படிகள் இறக்கப்பட்டு இருக்கிறது. பக்தர்கள் தண்ணீரைப் பயன்படுத்த அந்தப் படிகள் உதவுகின்றன. இந்தக் குளத்தைச் சுற்றிலும் தூண்கள் நிறைந்த நடைபாதை உள்ளது. பொற்றாமரைக்குளம், மதுரை கோயில் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது. எவ்வளவு புனிதமானதோ அவ்வளவு புனிதமானது. 40x60 மீட்டர்கள் அளவில் அமைந்துள்ள இந்தக்குளம் தமிழ்ச்சங்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ளது என்பது சரித்திரப் பக்கங்களில் கூறப்பட்டுள்ளது.இந்தக் குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் சங்கப் புலவர்களின் புகலிடமாகவும் அவர்கள் ஆலோசனை செய்யும் தமிழ் கூடாரமாகவும் விளங்கியது. புலவர்கள் எழுதிய கவிதைகளை இந்தக் குளத்தில் மிதக்கவிட்டு, அதில் மிதந்து வரும் கவிதைகளே தரமான கவிதைகள் என்று ஏற்றதாக செய்திகள் கூறுகின்றன. மேலும் இறைவன் தமிழ் மீது மையல் கொண்டு புலவர்களுடன் வாதம் செய்த இடமாகவும் மீனாட்சி அம்மன் கோயிலையே குறிப்பிடுகின்றனர். இந்திரனின் பூலோக வருகையின் போது இந்தக் குளம் அவனுக்கு தாமரைகளைக் கொடுத்ததாக வரலாறு உள்ளது. தற்போது இந்தக் குளத்திற்குள் தாமரைகள் இல்லை. அதற்கும் ஒரு கதை உண்டு. முன்னொரு காலத்தில் இந்தக் குளத்தின் அருகில் ஒரு கொக்கு தவம் புரிந்து வந்தது. அப்போது இக்குளத்தில் உள்ள மீன்கள் அதனிடம் குறும்பு செய்தன. அந்தக் கொக்கு அதனை சட்டை செய்யவில்லை. ஆனால் அது முக்தி அடையும்போது இறைவனிடம் "இந்தக்குளத்தில் எந்த உயிரினமும் இருக்கக் கூடாது " என்று வரம் வாங்கிவிட்டதாக அந்தக் கதை கூறுகிறது.இதனைச் சுற்றியுள்ள சுவர்களில் Fresco வகை மனதை மயக்கும் ஓவியங்கள் மீனாட்சியின் வாழ்க்கைச் சிறப்பபை விளக்கும் வகையில் வரையப்பட்டுள்ளன. இந்தக் குளத்திலிருந்து கோபுரங்களின் காட்சி மிக அழகாக இருப்பதை உணர்கிறீர்கள். பிராமணர்கள் மாலை வேலைகளில் இந்தக் குளத்தில் மந்திரங்கள் ஓதுவதும், சமஸ்கிருத வகுப்பு நடப்பதையும் காணலாம். இந்தக் குளத்தில் மார்பிள் பதிக்கப்பட்டுள்ள ஒரு மாடம் உள்ளது. மதுரை பேரரசின் புகழ்பெற்ற அரசி மங்கம்மாள் கட்டியதாகக் கூறுகிறார்கள். ராணி மங்கம்மாள் நாயக்கர் குல ராணி ஆவார். குறிப்பிட்ட ஒரு விழாவின் போது இறைவனும் இறைவியும் இங்கு வருகிறார்கள்.

மதுரை நகர வழக்கங்கள்

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம். தமிழ்நாட்டின் பழமையான நகரங்களில் மிகப் பெரியது (ஜனத்தொகையில் மட்டும்). தூங்கா நகரம், கூடல் நகரம் என்று பெயர் பெற்றது. நகரின் தூங்கா இயக்கத்திற்கு சீதோஷ்ணமும், நடைபாதைக் கடைகளும் முக்கிய காரணங்கள். குளிர்காலம் என்பது டிசம்பர் 25 முதல் ஜனவரி 15 வரை மட்டுமே. அதுவும் கம்பளி தேவைப்படாத அளவிற்கு தான். இங்குள்ள பெரும்பாலான மக்கள் கம்பளி, ஸ்வெட்டர் போன்றவைகளை உபயோகிப்பதே இல்லை.அதே போல் குடைகளையும் பொதுவாக வயதானோர் மட்டுமே வெயிலுக்கு பயன்படுத்துகிறார்கள். மழை சாதாரணமாக 1/2 மணி நேரம் முதல் 1 1/2 மணி நேரத்திற்கு மேல் பெய்வதில்லை, அதுவும் சில நாட்கள் மட்டும். மதுரை மக்களுக்கு மழை என்பது ஒதுங்கி நிற்கும் தருணம். ரெயின் கோட், ரப்பர் சூ, குடைகள் போன்றவை பள்ளிச் சிறார்களே அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

மதுரை நகரின் அமைப்பு:

நகரின் வாழ்க்கை 2500 வருட சரித்திரச்சின்னங்களோடு உரசிக் கொண்டு இயங்கி வருகிறது. நகரின் நடு நாயகமாக மீனாட்சி அம்மன் கோவில். பாண்டிய மன்னர்களும், தொடர்ந்து நாயக்க மன்னர்களும் கோவில் திருப்பணிகளை தாராளமாக செய்து வந்ததால் கோவில் பல மடங்கு விரிவடைந்து நான்கு புறமும் ஆடி வீதிகளை உள்ளடக்கி நிற்கிறது. மன்னர் திருமலை நாயக்கர் கட்டத்துவங்கிய ராஜகோபுரம் கோவிலைச் சுற்றி உள்ள சித்திரை வீதிகளையும், அதையடுத்த ஆவணி மூல வீதிகளையும் தாண்டி நிற்கிறது. இந்த வேலை நிறைவு பெற்றிருந்தால் இந்த வீதிகளும் கோவிலுக்குள் அடங்கி நின்றிருக்கும்.கோவிலைச் சுற்றி சதுரம் சதுரமாக விரிவடைந்து கொண்டே வரும் வீதிகளுக்கு தமிழ் மாதங்களின் பெயர்கள் தான். கோவிலுக்குள் ஆடி, கோவிலுக்கு வெளியில் சித்திரை, ஆவணி, மாசி என மூன்று சதுர வீதிகளுக்குப் பின் 'வெளி வீதி'கள். இவையனைத்தும் நகரின் மையப்பகுதியான பின்கோட் எண் 625001ல் அடங்கிய பகுதிகள் மட்டுமே. ஆனால் சரித்திரச் சின்னங்கள் நகரின் தற்போதைய எல்லையைத் தாண்டியும் பரவலாக உள்ளன.

மதுரையில் பார்க்க வேண்டியவை...

கோவில்களுக்குப் பெயர் போனது மதுரை. மதுரையிலும், நகரைச் சுற்றிலும் பல கோவில்கள் உள்ளன. நகரின் மையப் பகுதியில் மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இதுதவிர, வண்டியூர் மாரியம்மன் கோவில், கூடலழகர் பெருமாள் கோவில், இம்மையிலும் நன்மை தருவார் கோவில், திருப்பரங்குன்றத்தில் ¬முருகனின் ¬முதல் படை வீடு, அழகர் கோவில், திருமோகூர் சக்கரத்தாழ்வார் கோவில் என பல கோவில்கள் அமைந்துள்ளன.மதுரை நகரில் உள்ள ¬முக்கிய சுற்றுலா ஸ்தலங்களாக, திருமலை நாயக்கர் மஹால், காந்தி மியூசியம் ஆகியவை உள்ளன. மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பழனி, கொடைக்கானல் ஆகிய பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளன.மீனாட்சி கோவில்மதுரை என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது மீனாட்சி அம்மன் கோவில். பெரியார் பஸ் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மீனாட்சி கோவில். குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில், திருமலை நாயக்கர் காலத்தில் ¬முடிவுற்றது.மதுரை நகரின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள மீனாட்சி கோவில் நகருக்கு அழியாப் புகழைக் கொடுத்துள்ளது. கோவிலைச் சுற்றிலும் அமைந்துள்ள நான்கு வெளி வீதிகள்தான் நகரின் அன்றைய எல்லையாக இருந்தது. தென்னிந்தியாவின் பழம்பெரும் புராதனக் கோவில்களில் இதுவும் ஒன்று. தமிழர்களின் கலாசாரம், இலக்கியம், இசை, நடனம் என பல்துறைகளின் பெருமையை விளக்கும் மையமாக இது நின்று கொண்டுள்ளது.மூன்றாவது மற்றும் இறுதித் தமிழ்ச் சங்கம் மதுரையில் கூடியபோது, இலக்கிய சுவடிகளையெல்லாம் கோவில் குளத்தில் போட்டு விடுவது என்று ¬முடிவு செய்யப்பட்டது. அப்போது, நல்ல புத்தகங்கள் மட்டும் மூழ்காமல் இறைவனின் சக்தி தடுத்தது. தரம் குறைந்த புத்தகங்கள் குளத்தில் மூழ்கும்படியும் அது செய்தது. ஆகம விதிகளை கடுமையாகக் கடைப்பிடித்துக் கட்டப்பட்டது மீனாட்சி அம்மன் கோவில். ஒவ்வொரு மன்னர்களின் காலகட்டத்திலும் அவர்களது விருப்பத்திற்கேற்ப வளர்ந்த இக்கோவில் 65,000 சதுர அடிப் பரப்பளவில் அமைந்துள்ளது.

மீனாட்சி யார்? மலையத்துவாஜ பாண்டிய மன்னனின் மகள்தான் மீனாட்சி. மலையத்துவாஜ பாண்டியனுக்குக் குழந்தை இல்லை. இந்த நிலையில் கடவுள் அருளால் அவருக்கு ஒரு பெண் குழந்தை கிடைத்தது. அதைத் தத்தெடுத்துக் கொண்டார் பாண்டியன். ஆனால் குழந்தைக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன. இதனால் மன்னன் கவலையுற்றான். ஆனால் தன் மனம் கவர்ந்தவனைக் காணும்போது, மூன்றாவது மார்பகம் மறையும் என்று அசரிக் குரல் மன்னனை ஆறுதல் படுத்தியது.மீனாட்சி சிறந்த வீராங்கனையாக வளர்ந்தார். திருக்கயிலாயத்தில் ஒரு போரில் ஈடுபட்டிருந்தபோது, சிவபெருமானின் தரிசனம் கிட்டியது. அவரது அழகில் மெய் மறந்தார் மீனாட்சி. அப்போது அவரது மூன்றாவது மார்பகம் மறைந்தது. இதையடுத்து சிவ பெருமானையே மணந்து கொண்டு, மீனாட்சி, சுந்தரேஸ்வரர் என்ற கோலத்தில் மதுரைக்கு வந்தார். அப்போதுதான் மீனாட்சி, வேறு யாருமல்ல, பார்வதியின் மறு உருவம் என்பது அனைவருக்கும் விளங்கியது. தெய்வ மகளான மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரர் கோலத்தில் வந்த சிவனுக்கும் மதுரையில் கோவில் கட்டப்பட்டது. அதுதான் மீனாட்சி அம்மன் கோவில்.மொத்தம் 12 கோபுரங்களைக் கொண்டது மீனாட்சி அம்மன் கோவில். இதில் கிழக்கு, தெற்கு, வடக்கு மற்றும் மேற்கு கோபுரங்கள் வானுயர அமைந்திருப்பது காண்பதற்கு அழகூட்டுவதாக உள்ளது. நான்கு கோபுரங்களிலும் தெற்கு கோபுரம்தான் அதிக உயரமானது. 170 அடி உயரம் கொண்ட இக் கோபுரம், 9 நிலைகளைக் கொண்டது.பழமையான கோபுரம் 13-வது நூற்றாண்டில் கட்டப்பட்ட கிழக்கு கோபுரம். சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு எதிரில் உள்ளது. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் என்ற மன்னன் இக்கோபுரத்தைக் கட்டினார்.மீனாட்சி கோவிலில் இடம் பெற்றுள்ள அஷ்ட சக்தி மண்டபம், திருமலை நாயக்கரின் இரு மனைவிகளால் கட்டப்பட்டது. இதற்கு அடுத்து உள்ளது மீனாட்சி நாயக்கர் மண்டபம்.கோவிலின் தெற்கு கோபுர வாசல் வழியாக நுழைந்தால் தென்படுவது பொற்றாமறைக் குளம். இக்குளத்தின் நடுவில் தங்கத் தாமரை மிதக்க விடப்பட்டிருந்ததால் இப்பெயர் வந்தது. இங்குதான் தமிழ்ச் சங்கம் இயங்கியது.தொடர்ந்து உள்ளே சென்றால் ¬தலில் வருவது அம்மன் சன்னதி. அடுத்து வருவது சுந்தரேஸ்வரர் சன்னதி. அம்மன் சன்னதிக்கு முன்பாக, ஊஞ்சல் மண்டபம் உள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இங்கு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் சிலைகள் ஊஞ்சலில் வைத்து ஆட்டப்படும்.

கிளிக்கூண்டு மண்டபத்திற்கு வடக்கே அமைந்துள்ளது சுந்தரேஸ்வரர் சன்னதி. வழியில் நாம் பார்ப்பது பிரமாண்டமான பிள்ளையார் சிலை. இது ¬முக்குறுணிப் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறது. கோவில் கட்டும் போது, மண்ணுக்காக வண்டியூரில், பெரிய குளத்தை திருமலை நாயக்கர் வெட்டினார். அப்போது அங்கு இந்த பிள்ளையார் கிடைத்தார்.புது மண்டபம்:கிழக்கு கோபுரத்திற்கும், ¬முடிவு பெறாத நிலையில் உள்ள ராஜகோபுரத்திற்கும் இடையில் உள்ளது இந்த மண்டபம். இதற்கு வசந்த மண்டபம் என்றும் பெயர். திருமலை நாயக்கர் கட்டியது இது. அழகான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது இந்த மண்டபம்.கோவில் அருங்காட்சியகம்:மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே அமைந்துள்ளது இந்த அருங்காட்சியகம். ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள இந்த அருங்காட்சியகம் கோவிலில் உள்ள கட்டடக் கலை குறித்து விளக்கப்பட்டுள்ளது. ஆயிரங்கால் மண்டபத்தில் மொத்தம் 985 தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் அக்கால கட்டடக் கலை மறைந்துள்ளது. தூண்கள் அமைந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகியும் கூட இன்னும் அழகு குலையாமல் உயிரோட்டத்துடன் உள்ளன. ஒரு கோணத்தில் நின்று பார்த்தால், அத்தனை தூண்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது போலத் தோன்றும். அக்காலத்திய கட்டடக் கலையின் சிறப்பை விளக்குவதாக இது உள்ளது.மண்டபத்தின் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள தூண்களில் சிலவற்றைத் தட்டினால் இசை வரும். ஒவ்வொரு தூணும் ஒரு இசையைத் தரும் வகையில் அவை அமைக்கப்பட்டுள்ளன.காலை 6 மணி ¬தல் இரவு 8மணி வரை காட்சியகம் திறந்திருக்கும்.

அழகர் கோவில்

மதுரை நகரிலிருந்து 21 கிலோ மீட்டர் தூரத்தில் அழகர் கோவில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இக்கோவில் உள்ளது. இங்குள்ள பெருமாள், கள்ளழகர் என்று அழைக்கப்படுகிறார்.அழகர் மலையின் தெற்குப் பகுதியில் அழகர் கோவில் கோவில் உள்ளது. மலை மீது 4 கிலோ மீட்டர் தொலைவில்,¬முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழ¬முதிர் சோலை அமைந்துள்ளது. இங்குள்ள நூபுரகங்கை எனும் ஊற்றிலிருந்து, பக்தர்கள் தீர்த்த நீராடிச் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மாரியம்மன் கோவில் தெப்பக்குளம்

மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில், வண்டியூரில் அமைந்துள்ளது இக்கோவில். மீனாட்சி கோவில் கட்டும் போது, இக்கோவில் அருகே, பெரிய குளத்தை திருமலை நாயக்கர் வெட்டினார். இங்கிருந்துதான் மீனாட்சி கோவில் கட்டுமானப் பணிக்குத் தேவையான மண் அள்ளப்பட்டது.இந்தத் தெப்பக்குள மைய மண்டபத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து திருமலை நாயக்கர் மஹாலுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டிருந்ததாக ஒரு செய்தி உண்டு. ஆண்டு தோறும் தை மாதத்தில் இங்கு தெப்பத் திருவிழா நடத்தப்படும்.

திருமலை நாயக்கர் மஹால்

திருமலை நாயக்கர் மன்னரால் கட்டப்பட்ட சிறப்பான கட்டடங்களுள் இதுவும் ஒன்று. மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தற்போது உள்ள மஹால், அப்போது திருமலை மன்னர் வாழ்ந்த பகுதியின் ஒரு பகுதியே. பல பகுதிகள் காலப்போக்கில் அழிந்து விட்டன. சொர்க்கவிலாசம் மற்றும் ரங்க விலாசம் என இரு பகுதிகளைக் கொண்டது மஹால்.மஹாலில், ¬தலில் நுழைந்ததும் தென்படுவது, அரண்மனை தர்பார் மண்டபம். இங்கிருந்துதான் திருமலை மன்னர் மதுரையை ஆண்டு வந்தார். தினசரி நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறும். நவராத்திரி விழா, சித்திரைத் திருவிழா, மாசி விழா, தெப்பத் திருவிழா ஆகியவற்றை திருமலை நாயக்கர் நடத்தி வந்தார்.1822-ம் ஆண்டு இங்கிலாந்து ஆட்சிக் காலத்தில் நேப்பியர் மன்னர், மஹாலை புணரமைத்து, அதன் ஒரு பகுதியில் மாவட்ட நீதி மற்றும் நிர்வாக அலுவலகங்களை ஏற்படுத்தினார்.தமிழக அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இப்போது, மஹால் உள்ளது. தினசரி காலை 9 மணி ¬தல் மாலை 5 மணி வரை மஹாலைச் சுற்றிப் பார்க்கலாம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலி, ஒளிக் காட்சியும் இங்கு உண்டு. திருமலை நாயக்கர் வரலாறு, கண்ணகி வரலாறு இதில் இடம் பெறும்.

காந்தி மியூசியம்

தேசப் பிதா மகாத்மா காந்திக்கு நாட்டின் சில பகுதிகளில் நினைவு அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு ¬முடிவு செய்தபோது, தேர்வு செய்யப்பட்ட ஒரு நகரம் மதுரை. மகாத்மா காந்தி, ¬முழு ஆடை துறந்து அரை நிர்வாணத்திற்கு மாறியது, இந்த மதுரையில்தான்.காந்தி மியூசியத்தில் மகாத்மா பயன்டுத்திய ஆடைகள், கடைசியாக அவர் அணிந்திருந்த உடை ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவை தவிர நல்ல நூலக¬ம் உள்ளது.காந்தியின் நினைவைப் போற்றுவோருக்கு சிறந்த வரப்பிரசாதம் இந்த அருங்காட்சியகம்.

கோவலன் பொட்டல்

பெரியார் பஸ் நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோவலன் பொட்டல். கி.¬ 300 மற்றும கி.பி. 300 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலமான சங்க காலத்தில் இருந்து இடுகாடுகளை இங்கு காணலாம்.

திருப்பரங்குன்றம்
மதுரைக்குத் தெற்கே, 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது, ¬முருகனின் இரண்டாவது படை வீடான திருப்பரங்குன்றம். இது ஒரு குகைக் கோவில். ஒரே கல்லில் குடைந்த கோவிலில் ¬முருகன் குடி கொண்டுள்ளார். அசுரனான சூரபத்மனை வதம் செய்த ¬முருகன், இந்திரனின் மகளான தெய்வானையைத் திருமணம் செய்து கொண்டு இங்கு குடிபுகுந்தார். கோவிலின் நுழைவாயிலில் 48 தூண்கள் அமைந்த, கலை வேலைப்பாடுகளுடன் கூடிய மண்டபம் உள்ளது.

விரகனூர்: மதரை நகருக்குள் இருக்கும் சிறிய அணைக் கட்டு. வார இறுதி நாட்களில் சுற்றுலா செல்வதற்கு சிறந்த இடம். நகரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.வைகை அணை: மதுரையிலிருந்து 65 கிலோமீட்டர் தூரத்தில் வைகை அணை உள்ளது. சிறந்த சுற்றுலாஸ்தலமாகும்.

தேக்கடி: மதுரை மாவட்டம் மற்றும் தமிழக எல்லையில் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த சுற்றுலாஸ்தலம் காண்பவர் மனதுக்கு இதம் தரக் கூடியதாக உள்ளது. அழகான ஏரியும், அவ்வப்போது வந்து செல்லும் யானைக் கூட்டம் மற்றும் பிற விலங்குகளும் சுற்றுலாப் பயணிகளுக்கு நல்ல அனுபவத்தைத் தரும். மதுரையிலிருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் தேக்கடி உள்ளது.

கொடைக்கானல்: மதுரை மாவட்டத்தில் ¬முன்பு இருந்த கொடைக்கானல் இப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. ஊட்டிக்கு அடுத்து தமிழகத்தில் உள்ள இரண்டாவது பெரிய சுற்றுலா மலைவாசஸ்தலம் (7000 அடி உயரம்). மதுரையிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு ¬முறை பூக்கும் குறிஞ்சி மலர்களை கொடைக்கானலில் காணலாம். கோக்கர்ஸ் வாக், ஏரி, தற்கொலைப் பள்ளத்தாக்கு, குறிஞ்சியாண்டவர் கோவில் என கொடைக்கானலுக்கு அணி செய்பவை பல.

பழனி: 122 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள, தமிழ்க் கடவுள் ¬முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்று பழனி. தமிழகத்தின் திருப்பதி என்று சொல்லக் கூடிய அளவுக்கு நல்ல வருவாய் உள்ளது பழனி தண்டாயுதாபாணி கோவில். விஞ்ச் மூலம் கோவிலுக்குச் செல்லும் வசதி உள்ளது. பஞ்சாமிர்தம், விபூதிக்குப் பெயர் போனது பழனி. மதுரைக்கு அருகிலுள்ள மு¬க்கிய புனிதத்தலம்.

பிற இடங்கள்: மதுரையில் உள்ள மற்ற பிரபல இடங்களில் மங்கம்மாள் சத்திரம், தமிழன்னை சிலை, த¬க்கம் மைதானம் ஆகியவை ¬முக்கியமானவை. காந்தி மியூசியம் அமைந்துள்ள கட்டடம், ராணி மங்கம்மாளினால் கட்டப்பட்டது. இங்குதான் காந்தி மியூசியம், நூலகம், மாவட்ட அரசு அருங்காட்சியகம் ஆகியவை உள்ளன.

4 comments:

Unknown said...

நல்ல நிறைய தகவல்
வாழ்த்துக்கள்

இவன்
WWW.TAMILKUDUMBAM.COM
பாருங்க ரசிங்க நீங்களூம் அசத்துங்க

Sundaresan said...

நன்றி!! உங்கள் வாழ்த்துக்கு நான் கடமைப்பட்டுள்ளோன்

சிவத்தமிழோன் said...

தங்கள் வலைப்பூ கண்டு சுவைத்து மகிழ்ந்தேன். எனினும் போதிய நேர அவகாசம் இல்லாததன்மையால் முழுமையாக சுவைக்க முடியவில்லை. விரைவில் முழுமையாகப் படித்து சுவைக்க அவாப்பூண்டுள்ளேன். மதுரை மணம்பரப்பும் தங்கள் சேவையை பாராட்டுகிறேன்.தங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துகிறேன். தங்களோடு பகிர பல விடயங்கள் என் நெஞ்சில் பூத்துள்ளன. விரைவில் போதிய நேர அவகாசத்தை எல்லாம் வல்ல தமிழ்பரம்பொருளாகிய சிவன் எனக்கு வழிசமைத்துத்தருவான் என்ற துணிபோடு விடைபெறுகிறேன்.

நன்றி
சிவத்தமிழோன்

Sundaresan said...

தங்கள் வருகைக்கும் பதிவுக்கும் முதற்கண் நன்றி தெரிவித்துக்கொள்கிறன். தங்களின் வாழ்த்துக்களும் கருத்துக்களும் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கிறது. தங்களின் கருத்துக்கும் கேள்விக்கும் நானும் அதிக ஆவலாய் உள்ளேன்..

இப்படிக்கு
மதுரை தமிழ் "சுந்தரேசன்"